தேனி : மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டம் மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் தலைமையில் நடந்தது. சார்பு நீதிபதி ராஜ்மோகன், மாஜிஸ்திரேட்டுகள் கோபிநாதன், லலிதாராணி, துணை நீதிபதி சுந்தரி முன்னிலை வகித்தனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்து, பணம் சம்மந்தப்பட்ட அனைத்து உரிமையையில் வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், வாகன விபத்து, ஜீவானாம்சம், வங்கி கடன், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை, நில அபகரிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வருவாய் மற்றும் சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள் குறித்து இருதரப்பினர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது
இதே போன்று பெரியகுளத்தில் சார்பு நீதிபதி மாரியப்பன், மாஜிஸ்திரேட் சர்மிளா முன்னிலையில் நடந்தது. உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவணசெந்தில் குமார், மாஜிஸ்திரேட் ரமேஷ், ராமநாதன் முன்னிலையில் நடந்தது. ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், மாஜிஸ்திரேட் பிச்சைராஜன் முன்னிலையிலும், போடிநாயக்கனுார் மாஜிஸ்திரேட் வேலுமயில் முன்னிலையிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதிலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடனுக்காக நடத்தப்பட்ட 2010 வழக்குகளில் ரூ. 4.14 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.