மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வில்(டெட்) தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்.,17 சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
மதுரையில் இதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் பிரகாஷ், ஷான் பிரகாஷ், முத்துராமலிங்கம், முத்துக்குமார், மல்லிகா, முத்துமணி, மேகலா கூறியதாவது:
10 ஆண்டுகளாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. பணி வாய்ப்பின்றி காத்திருக்கும் எங்களை மட்டும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமன போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். வயது வரம்பை 45ல் இருந்து 57 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த உள்ளோம், என்றனர்.