திண்டுக்கல், : இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடந்து வருகிறது.
5 பிரிவுகளில் நடக்கும் இப் போட்டிகளில் நேற்று 70க்கு மேற்பட்ட பள்ளிகளிலிலிருந்து 1500 க்கு மேற்பட்ட மாணவர்கள், கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. 100மீ., 200மீ., 400மீ.,800மீ., 1500மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கையுந்து பந்து போட்டியில் 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். இன்று பள்ளி மாணவிகளுக்கான தடகளம், சிலம்பம், மாணவர்களுக்கான கால்பந்து, கபடி போட்டி நடக்க உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்தார்.