திண்டுக்கல், : திண்டுக்கல் கோட்டைகுளம் அருகில் உள்ள தொட்டியில் விழுந்த மகனை காப்பாற்ற சென்ற வெற்றிவேல் என்பவர் விஷவாயு தாக்கி பலியானார். விஷவாயு தாக்கி மயக்கமடைந்த சிறுவன் லிங்கேஷ்வரன் 8, தீயணைப்புத்துறை வீரர்கள் கார்த்திக்கேயன் 35, சுரேஷ் 38, ராஜ்குமார் 34 ஆகியோரை தீயணைப்புத்துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கட்ரமணன், திண்டுக்கல் நிலைய அலுவலர் மயில்ராஜ் உடனிருந்தனர்.