சென்னை, திருவேற்காடைச் சேர்ந்தவர் சத்யா, 22, புளியந்தோப்பைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 27, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதிஷ், 21, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ், 22, மதுரையைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 26, ஆகிய ஐந்து பேரும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, ஐந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்தாண்டில் இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர்.