திண்டுக்கல், : திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
விவசாய சங்க திண்டுக்கல் ஒன்றிய நிர்வாகிகள் சரத்குமார், ராஜேந்திரன், அம்மையப்பன், பழனிச்சாமி, பாக்கியம் பங்கேற்றனர். நகலை எரிக்க முற்பட்டபோது தடுத்த போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.