கடலுார், : கடலுாரில் ஊராட்சி தலைவர்களுக்கான 2 நாள் அடிப்படை பயிற்சி நடத்தப்பட்டது.
கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர்களுக்கான பொறியியல் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
ஊராட்சி ஒன்றிய உதவியாளர் சுமதி தலைமை தாங்கினார்.
பணி மேற்பார்வையாளர் ஜோதி, மாவட்ட முதன்மை பயிற்றுனர் ஆரோக்கிய செல்வி, ஸ்ரீரங்கபாணி ஆகியோர் மதிப்பீடுகள் தயாரித்தல், நில அளவீடு, சாலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.
கடலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 51 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் பாதியளவில் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.