விருத்தாசலம் : விருத்தாசலம் டி.எஸ்.பி., முகாம் அலுவலக வளாகத்தில் போலீசாருக்கு கவாத்து பயிற்சிநடந்தது.
விருத்தாசலம் உட்கோட்டத்தில் உள்ள விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை, ஆலடி, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு வாரந்தோறும் நடைபெறும் கவாத்து பயிற்சி, விருத்தாசலம் டி.எஸ்.பி., முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ரேவதி, ராமதாஸ், குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கப்பட்டது.