கடலுார், : வானமாதேவி அருகே கட்டாரசாவடியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று (12ம் ததி) நடக்கிறது.
கடலுார் மாவட்டம், வானமாதேவி அருகே கட்டாரசாவடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டு பாலவிநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் சன்னதிகள் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டது. அதையடுத்து, இன்று (12ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது. நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. மாலை 5:30 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று காலை7:00 மணிக்கு இண்டாம் கால யாக பூஜையும், 9:00 மணிக்கு பூர்ணாஹீதி, தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடும், சரியாக 10:00 மணிக்கு விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடக்கிறது.