விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ேஹாட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள சாலையோர ேஹாட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள், காலாவதியான உணவு பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து கலெக்டர் பழனி உத்திரவின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், பிரசாத், பத்மநாபன், ஸ்டாலின், ராஜரத்தினம் ஆகியோர் கொண்ட குழுவினர் ேஹாட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இரண்டு ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில் மற்றும் காலாவதியான உணவு பண்டங்களை பறிமுதல் செய்தனர்.
ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்த பின், மீண்டும் திறக்க அறிவுறுத்தி, ஓட்டல்களுக்கு தலா2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என, ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரித்தனர்.
ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடாமலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து, அழித்தனர்.