சிவகங்கை : சிவகங்கை அரண்மனைபகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 12 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான அனைத்து இடு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
இதனை கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்டத்தலைவர் மணியம்மா, மாவட்ட துணை செயலாளர்கள் அண்ணாதுரை, அழகர்சாமி, மானாமதுரை ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றியத்தலைவர் பராமத்மா, காளையார்கோவில் ஒன்றிய செய லாளர் வேங்கையா, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வீரையா, கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் தண்டியப்பன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.