வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆட்சியை கவிழ்த்த அதிமுக.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக ஆட்சியை கவிழ்த்த காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாமா என பிரதமர் மோடி கூறியிருந்தரா். பிரதமர் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளனர். பாஜ., வின் ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பிரதமர் மோடி கூட்டணி பற்றி கேட்கலாமா?. திமுக.,வின் தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். ஓரிரு திட்டங்கள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அவை அனைத்தையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் அவமதிக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன ஓரிரு திட்டங்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. அவை அனைத்தையும் இன்னும் ஒரே ஆண்டில் நிறைவேற்றிக் காட்டுவேன்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் அவமதிக்கிறார். ஆக்கப்பூர்வமான செயல்களை மட்டுமே சிந்திக்கிறேன். என்னுடைய இந்த பாணி எதிர்க்கட்சிகளை நிலைக்குழைய வைத்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி ; அவதூறு அரசியல் அவர்கள் பாணி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.