'மாப்பிள்ளை அவங்க தான்... ஆனா, அவங்க போட்டிருக்கிற சட்டை எங்களுடையது'ன்னு உரிமை கொண்டாடுறாரோ?

Updated : பிப் 14, 2023 | Added : பிப் 14, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில், சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் தான், ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும், பல்வேறு துறைகள் சார்பில், மத்திய அரசால், முதன்மை மாநிலத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க., அரசும், அந்த விருதுகளைப் பெற்றது. அந்த விருதுகள், 22 மாத தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டுக்காக அல்ல.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:


அ.தி.மு.க., ஆட்சியில், சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் தான், ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும், பல்வேறு துறைகள் சார்பில், மத்திய அரசால், முதன்மை மாநிலத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க., அரசும், அந்த விருதுகளைப் பெற்றது. அந்த விருதுகள், 22 மாத தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டுக்காக அல்ல. முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைக்காக, அது தொடர்கிறது.




latest tamil news


இப்ப என்ன சொல்ல வர்றாரு... 'மாப்பிள்ளை அவங்க தான்... ஆனா, அவங்க போட்டிருக்கிற சட்டை எங்களுடையது'ன்னு உரிமை கொண்டாடுறாரோ?



தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை:


குடியரசு தினத்தன்று, அதிக சாராயம் விற்றவர்களுக்கு, சான்றிதழ்அளித்து புளகாங்கிதம்அடைந்த தி.மு.க., அரசு, குறைவாக சாராயம் விற்றவர்களிடம், அதற்கான விளக்கத்தை கேட்பது வெட்கக்கேடானது. இந்த அரசு, குடி கொடுத்து குடியை கெடுக்கும் அரசு என்பதை உறுதி செய்கிறது.



latest tamil news


'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற, பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



இந்திய கம்யூ., கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராஜா பேட்டி:


தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், அரசியல், கொள்கை நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான், பிரதமர் மோடி, 'கம்யூனிசம் என்பது ஒரு அபாயமான சித்தாந்தம்' என்று சொல்கிறார். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் புரிதலோடு, மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது தான், இடதுசாரிகளின் நிலைப்பாடு.


பிரதமர் மோடி கேட்ட மாதிரியே, கேரளாவுல நீங்களும், காங்கிரசும் முதலில் ஒன்றுபட முடியுமா என பாருங்க... அப்புறமா, மத்தவங்களுக்கு பாக்கு, வெத்தலை வைக்கலாம்!



அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஆதிராஜாராம் பேச்சு:


ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிப்பதில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அன்று, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி இல்லை என, சட்டசபையில் எம்.ஜி.ஆர்.,முழங்கினார். நீதிமன்றம்அனுமதித்தும், ஜெயலலிதா தடை விதித்தார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையில் இருந்து தடம் மாறாமல், தடை விதித்தவர் பழனிசாமி. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியில், சிறுபான்மையினர்ஓட்டுகளை சுளையாக பெற்று, தென்னரசு வெற்றி பெறுவது உறுதி.


இப்படி, ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக ஆவேசமா முழங்கினா, இவங்க கூட்டணி கட்சியான பா.ஜ.,வினர் ஓட்டுகளே விழாம போயிடுமே... பரவாயில்லையா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
15-பிப்-202300:01:46 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana கம்யூனிஸ்ட்கள் மத சார்பின்மை என்பது அந்நிய நாட்டு மதங்களுக்கு சோம்பு தூக்குவது மற்றும் இந்தியாவின் மக்களான இந்துக்களை அளிக்க நினைப்பதும் தான். பாலைவன மதத்திற்கு இங்கே சோம்பு தூங்குவார்கள், ஆனால் அவர்கள் ஆட்சி செய்யுயும் சீனாவில் கேவலமாக அடக்குமுறை செய்வார்கள்.
Rate this:
Cancel
14-பிப்-202313:48:51 IST Report Abuse
N SASIKUMAR YADHAV ஆர்எஸ்எஸ் என்றாலே அலறுகிறது இந்த மானங்கெட்ட திராவிட கட்சிகள் . ஆர்எஸ்எஸ் எப்போதுமே திராவிட கட்சிகளை போல கேவலமான வாக்குவங்கி அரசியலை செய்வதில்லை . அதுபோல சிலரை போல ஒரு சாப்பாட்டு பொட்டலத்தை கொடுத்துவிட்டு மதப்பிரச்சாரம் செய்வதில்லை . சமூகசேவை செய்வதை மட்டுமே கொண்டு செயல்படுகிறது தேசபக்தியுள்ள ஆர்எஸ்எஸ்
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
14-பிப்-202312:30:23 IST Report Abuse
Gopinathan S இந்த நாராயணன் என்ற கொசு தொல்லை தாங்க முடியல....
Rate this:
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
14-பிப்-202314:21:59 IST Report Abuse
Ramuநல்லதைத்தானே சொல்லியிருக்கிறார். இதில் தொல்லை என்ன இருக்கிறது?...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
14-பிப்-202316:21:55 IST Report Abuse
Suppanகோபி அய்யா சாராயக் கடைக்கு முன்னாள் "குடி குடியைக் கெடுக்கும்". அதன் நீட்சியாக அதிகமாக சாராயம் விற்றவர்களுக்கு ஊக்கம். வெட்கக்கேடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X