வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் திவால் ஆகி விட்டதாக கூறியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், மக்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடி உள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில், நாம் திவாலான நாட்டில் வசித்து வருகிறோம். பாகிஸ்தான் கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், அவை ஏற்கனவே நடந்துவிட்டது. மக்கள் அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும்.

பாகிஸ்தான் திவாலாகிவிட்டது. இந்த பிரச்னைக்கான தீர்வு பாகிஸ்தானில் உள்ளது. ஆனால், நாம் ஐஎம்எப் அமைப்பிடம் உதவி கேட்டு எதிர்பார்த்து நிற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.