விருத்தாசலம்: விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க அவசர ஆலோசனை கூட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க தனவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தர்ராஜன், பா.ஜ., செந்தில்குமார், செல்வராசு, ஜெயராமன், மக்கள் நீதி மய்யம் வெங்கடகிருஷ்ணன், பா.ம.க., நகர செயலாளர் முருகன், இந்திய ஐக்கிய கம்யூ. கோகுல கிறிஸ்டிபன், நாம் தமிழர் பிரபாகரன், ஐக்கிய ஜமாத் பாஷா, உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த விருத்தாசலம் தனி மாவட்டம் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும், விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், இருசக்கர வாகன பேரணி என தொடர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் முதல்வரை சந்திப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.