விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,700 டன் அரிசி ரயிலில் வந்தது.
தமிழக அரசு பொது விநியோகத்திற்காக இந்திய உணவுக் கழகத்திடம் அரிசியை கொள்முதல் செய்கிறது.
மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலம், பெத்த பள்ளி தாலுகா, கரீம் நகர் பகுதியில் இருந்து நேற்று 2,700 டன் அரிசி ரயில் மூலம் முண்டியம்பாக்கம் வந்து சேர்ந்தது.
இந்திய உணவு கழக குடோன் மேலாளர் சதாம் உசேன் மேற்பார்வையில் ரயிலில் வந்த 54 ஆயிரத்து 550 அரிசி மூட்டைகளை ரயில்வே கூட்ஸ் ெஷட் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குண்டலபுலியூரில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாவட்டத்தின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.