நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை, முகாம்பிகை நகரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாயனக்கொள்ளை விழா நடந்தது.
இதையொட்டி மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு மாயனக்கொள்ளை விழா நடந்தது.
விழாவில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் விலை நிலங்களில் விளைந்த பொருட்களை மாயனத்தில் கொள்ளை விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை மடுகரை கிராம மக்கள் செய்தனர்