சென்னை :தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், நான்காவது தமிழக மாநில யூத் தடகள 'சாம்பியன்ஷிப்' போட்டி, வண்டலுாரில் உள்ள தமிழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடந்தது. இதில், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 28 போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் கிளப், அகாடமியை சேர்ந்த 800 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அனைத்து போட்டிகள் முடிவில், 188 புள்ளிகள் பெற்று, எஸ்.ஏ.வி., பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 'சாம்பியன்' பட்டம், கோப்பையை வென்றது.
'ரன்னர்' பட்டத்தை, 158 புள்ளிகளில் பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 60 புள்ளிகளில் எல்ஷடா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் கைப்பற்றின.