திருப்பூர்:காங்கயம், சிவன்மலையை சேர்ந்தவர் சென்னியப்பன், 50. கோவில் அடிவாரத்தில், மூன்று கன்று குட்டிகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
நேற்று காலை கன்றுகுட்டிகளில், இரண்டு இறந்து கிடந்தது. தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய்கள் குட்டிகளை கடித்து குதறியது தெரிந்தது.
இதுபோல் தொடர்ச்சியாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement