அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்பின் உதவியோடு, 2.25 லட்சம் ரூபாய் செலவில் போர்வெல் அமைக்கப்பட்டது.
அவிநாசி அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள் என தினமும், 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால், கழிப்பிடம் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக தண்ணீர் தேவை அதிகரித்தது.
மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் பராமரிப்பின்றி இருப்பதால், தண்ணீர் இல்லாமல் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதையறிந்த, நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர், கலெக்டரிடம் மனு அளித்து, போர்வெல் அமைக்க பணிக்கு ஒப்புதலை பெற்றனர்.
இதையடுத்து, 2.25 லட்சம் ரூபாய் செலவில் போர்வெல் அமைத்து கொடுக்க, ருக்மா கார்டன் உரிமையாளர் ருக்மணி நிதி அளித்தார். இதில், கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர் சத்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.