பல்லடம்:பல்லடம் அருகே, சித்தம்பலம் கோவிலில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி மாணவ மாணவியர், பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்றனர்.
முன்னதாக, திருப்பூரில் இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கோவிலில் நடந்த மகா ம்ருத்யுஞ்ஜய சிறப்பு வேள்வி வழிபாட்டில் பங் கேற்றனர்.
தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் மாணவர்கள் தங்களின் கைகளால் நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். கல்வியில் மேம்பட வேண்டி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'கோவில்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் அழைத்து வரப்படுவது அதிகரித்து வருகிறது. இது இன்றைய தலைமுறைக்கு ஆரோக்கியமான ஒன்றாகும். இதனால் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி ஒழுக்கம், ஆன்மீகத்தில் மேம்படுவர்.
இம்மாதத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்தமாணவ, மாணவியர் கோவிலில் வழிபட்டு பிரார்த்தனை செய்து சென் றுள்ளனர். இதர பள்ளிகளும் இதை பின்பற்றுவது சிறந்தது' என்றனர்.