பொள்ளாச்சி:பொள்ளாச்சி, காந்தி சிலை அருகில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடும்பாவியை எரித்து, தமிழ் புலி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அருந்ததியர் சமூகத்தினரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவாக பேசியதாக கூறி, தமிழ் புலி கட்சியினர், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் வானுகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சீமான் கொடும்பாவியை எரித்து கண்டன கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.