பொள்ளாச்சி:பொள்ளாச்சி கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில், வசியாபுரம் முதல் மோதிராபுரம் வரை கிளைக்கால்வாயில் தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில், நேற்று மாலை, கால்வாயில் பெண் சடலம் மிதந்து வருவதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். அவர்கள், பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், ஜல்லிப்பட்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் தாயார் லட்சுமி, 85, என்பது தெரியவந்தது. மேலும், காலை, 5:00 மணி முதல் அவரை காணவில்லை என, தேடியுள்ளனர். கால்வாய் அருகே சென்றவர், தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.