''துக்க வீட்டுக்கு போயிட்டு, குளிக்காம வந்து கைகுலுக்கிட்டு போயிட்டாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பகுதியில, சிறுத்தை நடமாட்டத்தால அந்தப் பகுதி மக்கள் பீதியில இருக்காங்கல்லா... சமீபத்துல, சிறுத்தை தேடுதல் வேட்டைக்கு வனத்துறையினர் தயாராகிட்டு இருந்தாவ வே...
''அப்ப, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் எம்.பி., சின்ராஜ் அங்க வந்தாரு... இவர், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்துல நின்னு ஜெயிச்சவர்... வேட்டைக்கு தயாரா இருந்த வனத்துறையினரிடம் கைகுலுக்கி, ஆலோசனை நடத்துனாரு வே...
''திருச்சியில நடந்த உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு போயிட்டு திரும்புற வழியில, உங்களை பார்க்க வந்தேன்னும் சொன்னாரு... இதைக் கேட்டு, வனத்துறையினர், 'ஷாக்' ஆயிட்டாவ வே...
![]()
|
''ஏன்னா, காட்டுக்குள்ள போற மலைவாழ் மக்கள், வனத்துறையினர்னு யாரா இருந்தாலும், வன தேவதையை வேண்டிட்டு தான் கிளம்புவாவ... ஆனா, துக்க நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த எம்.பி., வீட்டுக்கு போய் குளிக்காம, நம்மை தொட்டு உளப்பிட்டாரேன்னு நொந்து போயிட்டாவ வே...
''இதனால, உடனே அவங்க தேடுதல் வேட்டைக்கு போகலை... சாயந்தரமா குளிச்சிட்டு, வன தேவதையை வேண்டிட்டு போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.