திருத்தணி--திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், நேற்று, மாசி அமாவாசை மற்றும் சோமவார அஸ்வத்தநாராயண பூஜை நடந்தது.
இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தை திரளான பெண்கள், 108 முறை வலம் வந்து அம்மனை வழிபட்டனர்.
அதே போல, திருத்தணி அடுத்த, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மேலும், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதே போல, திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.