வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு இருப்பதாக போன் வந்ததால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் போலீசார் சோதனையிட்டதில் புரளி என தெரிய வந்தது. போன் எண்ணை வைத்து மிரட்டல் விட்டவர் கண்டறியப்பட்டார். தெலுங்கானாவை சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தை தவற விட்ட ஆத்திரத்தில் இவ்வாறு மிரட்டியதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.