ஹால் டிக்கெட் பெறுவதில் தாமதம் சர்வர் பிரச்னையால் சிக்கல்

Added : பிப் 22, 2023 | |
Advertisement
உடுமலை : உடுமலை, மடத்துக்குளத்தில் சர்வர் பிரச்னையால், தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் என்.எம்.எம்.எஸ்., எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, கல்வியாண்டுதோறும் நடக்கிறது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு,



உடுமலை : உடுமலை, மடத்துக்குளத்தில் சர்வர் பிரச்னையால், தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் என்.எம்.எம்.எஸ்., எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, கல்வியாண்டுதோறும் நடக்கிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை கல்வி ஊக்கத்தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வரும் 25ம்தேதி நடக்கிறது.

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாணவர்களுக்கு, பள்ளிகளில் தேர்வு எழுதுவோர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது.

இன்னும் 2 நாட்களில் தேர்வு இருக்கும் நிலையில், ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹால் டிக்கெட்டில் தான், மாணவர்களுக்கான தேர்வு மையமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் தேர்வு மையம் அறிந்து கொள்வதிலும் தாமதமாகியுள்ளது.

சர்வர் பிரச்னையால் காத்திருக்கும் மாணவர்களை, வேறு பள்ளிகளில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள, கல்வித்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X