கே.கே., நகர், கே.கே., நகரில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணிகள் நடபெற்று வருகின்றன.
கோடம்பாக்கம் மண்டலம், 137 வது வார்டு கே.கே., நகர் வெங்கட்ராமன் காலனியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
இந்த கட்டடம் பழுதடைந்து காட்சியளித்தது. இந்நிலையில், கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 137வது வார்டு கவுன்சிலர் நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.