செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
இதற்கு, மாவட்ட தலைவர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் விக்டர் சுரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பூங்குழலி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆய்வு கூட்டங்களை மாலை 6:00 மணிக்கு மேல் நடத்தக் கூடாது.
விடுமுறை நாட்களில் மாவட்டம் முழுதும் இணையவழி கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.