வியாசர்பாடி வியாசர்பாடி, அன்னை சத்யா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி, 60. இவருக்கு மூக்கையா, 38; சுரேஷ்குமார், 36; சதீஷ்குமார், 34 என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
லட்சுமி, தனக்கு தெரிந்தவர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு லட்சுமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலில் லட்சுமி இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாத்ரூமில் இருந்த ஆசிட்டை லட்சுமி குடித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமி உயிரிழந்தார்.
இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.