பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள பானி பூரி கடை ஒன்றில், இளைஞர்கள் சிலர் நேற்று மாலை பானி பூரி சாப்பிட வந்தனர். போதையில் இருந்த இளைஞர்கள், கடையில் வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர் பப்பு, 26 என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். பஸ் ஸ்டாண்ட் எதிரே மதுக்கடை அமைந்துள்ளதால், அடிக்கடி இது போன்ற தகராறுகள், மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.