திருப்புவனம்:தி.மு.க.வினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் கூறியதாவது: கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க.வும் கூட்டணி கட்சியினரும் நிறைவேற்றாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னமும் அதிகரிக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
நெல் கொள்முதல் மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட நான்கு மடங்கு அதிகமாக வசூலிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் திருப்புவனம் வட்டாரத்தில் வெற்றிலை சாகுபடி வெகுவாக குறைந்து வரும் நிலையில் அதனை காக்க கூடுதல் நிதி ஒதுக்கி வெற்றிலை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.