கடலுார் : ஈஸ்டர் பண்டிகை தவக்காலம் நேற்று துவங்கியதையடுத்து, கடலுார் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை உள்ளது. அதை முன்னிட்டு, 40 நாட்கள் தவக்காலம் கிறிஸ்தவர்கள் தீவிரமாக கடைபிடித்து, விரதம் இருந்து அன்னதானம் வழங்குவர். தவக்காலம் நிறைவின்போது கடைசி 3 நாட்கள் குருத்தோலை ஞாயிறு. புனித வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கும்.
அந்த வகையில், சாம்பல் புதனான நேற்று கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை துவக்கினர்.
கடலுார் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை தேவாலயம், துாய எபிபென்னி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குதந்தைகள் வின்சென்ட் மரிய லூயிஸ், பிரான்சிஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தைகள் சாம்பல் பூசி ஆசீர்வாதம் செய்தனர். திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.