திண்டிவனம் : திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் பெறப்பட்டது.
திண்டிவனம் அவரப்பாக்கம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., நகரமன்ற உறுப்பினர் வடபழனியின், தாயார் கம்சலை அம்மாள் நேற்று இறந்தார். அவருடைய இரு கண்களும், திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் மூலம் தானமாக பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சங்க வட்டாரத் தலைவர் சுரேஷ், மாவட்ட தலைவர்கள் சம்பத்குமார், தமிழ்அமுதன், கோதை பாலாஜி, சங்க தலைவர் செந்தில்குமார், உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்களை தானமாக வழங்கிய வடபழனியின், குடும்பத்திற்கு திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.