மாநில தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம்

Added : பிப் 23, 2023 | |
Advertisement
போடி- -போடி சி.பி.ஏ., கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டு தொலைநோக்கு ஆராய்ச்சி நிறுவனம், போடி சி.பி.ஏ., கல்லூரி இணைந்து மாநில தொழில் நுட்ப பயிற்சிக்கான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், காப்புரிமம் மற்றும் திட்டமிடல் மைய ஆணையாளர்
 மாநில தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம்



போடி- -போடி சி.பி.ஏ., கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டு தொலைநோக்கு ஆராய்ச்சி நிறுவனம், போடி சி.பி.ஏ., கல்லூரி இணைந்து மாநில தொழில் நுட்ப பயிற்சிக்கான கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், காப்புரிமம் மற்றும் திட்டமிடல் மைய ஆணையாளர் ராஜா, பேராசிரியர் உஷா ராஜ நந்தினி, விஞ்ஞானி கோமதி பத்ம திலகா, கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், துணை முதல்வர் பாலமுருகன், கல்லூரி உள் தர மதிப்பீட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார்.

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன செயல் உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில்: 'அறிவுசார் சொத்துரிமை என்பது அறிவியல் துறைகளுக்கு மட்டுமல்ல புவிசார் குறியீடு போன்று பல துறைகளுக்கும் பொருந்தும். பேராசிரியர்கள் தங்களது அறிவுசார் உடைமைகளை பிற கல்லூரி, பல்கலை பேராசிரியர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இரண்டாம் இடத்தில் உள்ள நம் மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டுவர முடியும்', என்றார். கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரியை சேர்ந்த 150க்கு மேற்பட்ட பேராசிரியர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X