திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் 102 சி.ஆர்.பி.சி., படி பதிவு செய்யப்பட்ட 238 வாகனங்கள், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் கைப்பற்றபட்ட 16 வாகனங்கள் என 254 வாகனங்கள் பிப்.28ல் காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மார்ச் 1ல் வழக்கு பதியப்பட்ட வாகனங்கள், போலீசார் வாகனங்கள் 244 ஏலம் விடப்படுகிறது. டூவீலர் ஏலம் எடுக்க விரும்புவர்கள் முன்தொகையாக ரூ.1000,நான்கு சக்கரம் ரூ.5000 செலுத்தி அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதிசீட்டு பிப்.26, 27ல் காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை மை தானத்தில் விநியோகிக்கப்படும்.
18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்தி வாகனங்களை பெற்று கொள்ளலாம். இது தொடர்பாக தொர்பு கொள்ள 0451 - 2461 600ல் அழைக்கலாம் என, எஸ்.பி.,பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.