அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு சென்றதாக ரவி மீது குற்றச்சாட்டு

Added : பிப் 23, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
உத்தர கன்னடா-பா.ஜ., தேசிய முதன்மை செயலர் ரவி, அசைவம் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குள் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான படங்கள் பரவி வருகின்றன.பா.ஜ., தேசிய முதன்மை செயலரான ரவி, பிப்ரவரி 19ல், உத்தரகன்னடா மாவட்டத்துக்கு வந்தார். கார்வாரில் நடந்த சிவாஜி ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பட்கலின், சிராலியில் உள்ள எம்.எல்.ஏ., சுனில் நாயக் வீட்டில் விருந்து
 அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு சென்றதாக ரவி மீது குற்றச்சாட்டுஉத்தர கன்னடா-பா.ஜ., தேசிய முதன்மை செயலர் ரவி, அசைவம் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குள் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான படங்கள் பரவி வருகின்றன.

பா.ஜ., தேசிய முதன்மை செயலரான ரவி, பிப்ரவரி 19ல், உத்தரகன்னடா மாவட்டத்துக்கு வந்தார். கார்வாரில் நடந்த சிவாஜி ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பட்கலின், சிராலியில் உள்ள எம்.எல்.ஏ., சுனில் நாயக் வீட்டில் விருந்து சாப்பிட்டார்.

பின், பட்கல் நகரின் பழைய பஸ் நிலையம் அருகில் நாகபானா கோவில், ஹனுமர் கோவிலுக்கு சென்றார்.

நாகபானா கோவில் கதவு மூடப்பட்டிருந்ததால், கேட் முன் பகுதியில் நின்று ரவி, சுவாமியை நமஸ்கரித்தார். கேட் முன் பகுதியிலேயே, எம்.எல்.ஏ., சுனில் நாயக்கும், கோவில் கமிட்டி உறுப்பினர்களும், ரவியை கவுரவித்தனர்.

இதற்கு முன் அசைவம் சாப்பிட்டு, கோவிலுக்குள் நுழைந்த சித்தராமையா, பலரின் கண்டனத்துக்கு ஆளானார். இப்போது எம்.எல்.ஏ., வீட்டில் அசைவம் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குள் நுழைந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர், கட்சியினருடன் அமர்ந்து அசைவம் சாப்பிடும் படங்கள், வேகமாக பரவி வருகின்றன.


ரவி விளக்கம்இது குறித்து, ரவி கூறியதாவது:

அன்றைய தினம், நான் அசைவம் சாப்பிட்டது உண்மைதான். ஆனால், கோவிலுக்குள் செல்லவில்லை. கதவு மூடப்பட்டிருந்தது. வெளியில் இருந்தே கை கூப்பி வணங்கினேனே தவிர, கோவிலுக்குள் நான் செல்லவில்லை.

எனக்கும் கடவுள் மீது பக்தி உள்ளது. அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்பது, எனக்கும் தெரியும். தார்மீக நடைமுறையை கடுமையாக பின்பற்றுபவன் நான். ஆண்டுதோறும் தத்த மாலை அணிகிறேன். நவராத்திரி விரதம் இருப்பேன். ஆன்மிகத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். நான் நாத்திகன் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-பிப்-202300:25:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அனுமார் கோவிலுக்கு தானே? வானரங்கள் சர்வ உண்ணிகள், அவை தாவர பொருட்கள் மற்றும் விலங்கு இறைச்சி மற்றும் விலங்கு பொருட்கள் இரண்டையும் சாப்பிடுகின்றன. வானரங்கள் மற்றும் மனித குரங்குகள் பொதுவாக பழங்கள், பூக்கள், மென்மையான இலைகள், பச்சை பழங்கள், மென்மையான தண்டுகள் மற்றும் வேர்களை உண்ணும். ஆனால் குரங்குகள் முட்டைகள், குட்டிப் பறவைகள், சிறு பறவைகள், எறும்புகள், கரையான்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் கிரிகெட் பூச்சிகளை கூட உண்ணும். பாபூன் வகை குரங்குகள் மீன், மட்டி, பறவைகள், சிறிய முயல்கள் மற்றும் குட்டி மிருகங்களை கூட உண்பதாக அறியப்படுகிறது. - இது உலக நிலவரம். தேவையா உங்கள் கலவரம்?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-பிப்-202300:05:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்போ சாமிக்கு கிடா வெட்டி கறிக்கஞ்சி போடுறது தெய்வ குத்தமா? அடப்பாவிகளா சாமிகளிலேயே கூட ஜாதி இருக்குதா.. இது நமக்கு புதுசா இருக்கே.
Rate this:
Cancel
zakir hassan - doha,கத்தார்
25-பிப்-202314:02:52 IST Report Abuse
zakir hassan தமிழர்கள் வெறுக்கிறார்கள் சாப்பாடு அவர் அவர் உரிமை அதை விமரிசிக்க யாருக்கும் உரிமையில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X