செஞ்சி : வயிற்று வலி தாளாமல் பூச்சி மருந்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் அருகே உள்ள ஈ.மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் தண்டபாணி, 50; விவசாயி.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 16ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.