சென்னை: நரபலி அச்சத்தால் தமிழத்திற்கு வந்த ம.பி பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் உறுதியளித்தது.
நரபலி கொடுக்க வளர்ப்பு தாய் முயற்சிப்பதால், தமிழகத்துக்கு தப்பி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண், போலீஸ் பாதுகாப்பு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,23) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக போலீஸ் தரப்பில், ‛நரபலி அச்சத்தால் தமிழகத்திற்கு வந்த ம.பி., பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‛இந்த நூற்றாண்டிலும் மாந்திரீகத்தை நம்பி நரபலி கொடுப்பது அதிர்ச்சியளிக்கிறது' என கருத்து தெரிவித்தனர்.