‛மோடி எங்களுக்கு வேண்டும்': கடவுளிடம் பிரார்த்திக்கும் பாக்., இளைஞர்

Updated : பிப் 23, 2023 | Added : பிப் 23, 2023 | கருத்துகள் (54) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்' என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால்
Pakistan, PM Modi, Narendra Modi, பிரதமர் மோடி, பாகிஸ்தான், ஆள வேண்டும், இளைஞர், பிரார்த்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்' என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பதனையாகிறது. கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.700 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனையடைந்துள்ளனர்.



latest tamil news

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒரு இளைஞரிடம், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார். அப்போது அந்நபர் ஷெபாஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியதுடன், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்' என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




பிரதமர் மோடி


அந்த யூடியூபரிடம் பாக்., இளைஞர் பேசியுள்ளதாவது: பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ.20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்குவோம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவ முடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின்தொடர்கின்றனர்.



latest tamil news

எங்களுக்கு நரேந்திர மோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனசிரோ, இம்ரானோ, முஷரப்போ தேவைப்படாது. எங்களுக்கு தேவை நரேந்திர மோடி மட்டுமே. அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.



ஆட்சி


மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழ தயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (54)

M Ramachandran - Chennai,இந்தியா
02-மார்-202313:47:24 IST Report Abuse
M  Ramachandran மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தி ஜின்னா முன் பின் யோசனை செய்யாமல் செய்த காரியம் இன்று பாவம் மக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க காரணமாகி விட்டது .மக்கள் அவர்களும் நம் சகோதரர்களென பரிதாபத்திற்குரிய மக்கள். நாம் வருந்தலாம் அதற்க்கு மேல் என்ன செய்வது .
Rate this:
Cancel
Nallashami - Coimbatore,இந்தியா
24-பிப்-202313:08:46 IST Report Abuse
Nallashami பாகிஸ்தானிலும் ஒரு RSS கைக்கூலி..சங்கி ..என ஒப்பாரி வைக்க இங்கே ஒரு கூட்டம்..இன்னுமா கிளம்பல..🤗
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
24-பிப்-202311:01:41 IST Report Abuse
seshadri அந்த நபருக்கு தெரிந்தது இங்குள்ள கூமுட்டைகளுக்கு தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X