புதுடில்லி:'ஒக்காயா' மின்சார இரு சக்கர வாகன நிறுவனம், அதன் பாஸ்ட் எப்.டூ.எப்., என்ற மின்சார ஸ்கூட்டரை, இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது.
இதை, இந்நிறுவன வலைதளம் வாயிலாகவோ அல்லது அருகில் இருக்கும் விற்பனை மையம் வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு இரண்டு ஆண்டு அல்லது 20 ஆயிரம் கி.மீ., உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஆறு நிறங்களில் வெளியாகிறது. இதன் விலை, 84 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.