செங்கல்பட்டு:சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால், 67. என்பவர், கடந்த 2013ம் ஆண்டு, நவ., 11ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெயபாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு சிறப்பு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்றது.
இதில், ஜெயபாலுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தமிழரசி, தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 50 ரூபாய் இழப்பீட்டு தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.