தஞ்சாவூர்:''பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,'' என, பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில்அவர் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கூறியது போல, உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தான் கூறி உள்ளனர்.
சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என, உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. அதனால், தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.
எங்களுக்கு இது, மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. சிவில் நீதிமன்ற வழக்கை, அவர்களுடைய கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருப்பதால், எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.