திரு.வி.க., நகர்: சென்னை பெரவள்ளூர், கே.சி.கார்டன், 5வது தெருவைச் சேர்ந்தவர் திவாகர், 17; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.பி.ஏ., படிக்கிறார்.
இவரை, நேற்று முன்தினம் மதியம், பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில், ஐவர் கும்பல் விரட்டி வெட்டியது.
படுகாயமடைந்த அவர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்ததில், மது போதையால் ஏற்பட்ட மோதலில், திவாகரை வெட்டியது தெரிந்தது.
இதில் தொடர்புள்ள புளியந்தோப்பு, நரசிம்மன் நகரைச் சேர்ந்த சூர்யா, 17, கங்கா கணேஷ், 18, கொளத்துார், வினாயகபுரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி பவன்குமார், 18.
மேலும், பெரம்பூரைச் சேர்ந்த அமர், 18, முகமது ஏஜியாஸ், 18, ஆகியோர், நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.