கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி ரோட்டில், சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்படுகிறது.
சங்க செயலராக கோவை, வெள்ளலுாரைச் சேர்ந்த மீனசென்னம்மாள், 49, இருந்தார். அதே சங்கத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் சுந்தரவடிவேலு, 66; ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், சங்கத்தில், 2021-ம் ஆண்டு தணிக்கை நடந்தது. அதில், இருவரும், பொய்யாக கணக்கு எழுதி, 61.58 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.
இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய சங்க துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன், 55, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
மீனசென்னம்மாள், சுந்தரவடிவேலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.