வாஷிங்டன்,போலந்து நாட்டில் இருந்து புறப்படும்போது, விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறியபோது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 80, தடுமாறி விழப் பார்த்தார். ஆனால், உடனடியாக சுதாரித்து அவர் எழுந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சமீபத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு சென்றார். அங்கிருந்து போலந்து சென்ற அவர், அங்கிருந்து அமெரிக்கா திரும்பினார்.
![]()
|
போலந்து விமான நிலையத்தில், 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தின் படிக்கட்டில் ஏறியபோது, ஜோ பைடன் தடுமாறி விழப் பார்த்தார். ஆனால், உடனடியாக சுதாரித்த அவர் எழுந்தார். பின், மற்ற படிக்கட்டிகளில் ஏறி விமானத்துக்குள் சென்றார்.இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை இவ்வாறு விமானத்தில் ஏறும்போது, ஜோ பைடன் தடுமாறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement