திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் சாலையில் செல்வோரை போதையில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி தாக்கினார். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் ரமணர் யோகி ராம்சுரத்குமார் மற்றும் சேஷாத்திரி ஆசிரமம் என பல ஆன்மிக தலங்கள் உள்ளன.
இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கியுள்ளனர். அவர்களில் மூன்று மாதங்களுக்கு முன் வந்த அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் 50 என்பவரும் ஒருவர்.
செங்கம் சாலையில் வாடகை வீட்டில் இவர் தங்கியுள்ளார். இவர் நேற்று கஞ்சா போதையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி எதிரே சாலையில் பலரையும் தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது அவர்களையும் தாக்கினார். இதையடுத்து போலீசார் அவரின் இரண்டு கைகளையும் துணியால் கட்டி ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.