வாஷிங்டன் அமெரிக்காவில் கடந்தாண்டு யூதர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை, அந்த நாட்டு போலீஸ் துறை வெளியிட்டுள்ளது; இதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு மட்டும் அமெரிக்கா முழுதும் மதம் தொடர்பாக, 1,005 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில், யூதர்கள், சீக்கியர்கள் மீது தான் அதிக தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டு மதங்கள் தான், அதிக முறை தாக்குதலுக்கான இலக்குகளாக இருந்தன.
யூதர்களுக்கு எதிராக, 32 சதவீத வன்முறைகளும், சீக்கியர்களுக்கு எதிராக 21 சதவீத வன்முறைகளும் நடந்துள்ளன.
2021ல் நடந்த மத வன்முறைகளை ஒப்பிடும்போது, கடந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல, இன ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கடந்தாண்டு, 63 சதவீத வன்முறைகள் அரங்கேறியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.