திருவெண்ணெய்நல்லுார் : மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் மனைவி உத்ராணி, 57; கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக அவரது வீட்டில் உள்ள மோட்டார் ஸ்விச்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement