புதுச்சேரி : புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு காஞ்சி மாமுனிவர் நிறுவன இயக்குனர் செல்வராஜ் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, இளமுனைவர் மற்றும் முதுகலை பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கவர்னர் தமிழிசை, தங்கப்பதக்கம் வென்ற 68 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கி பேசினார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, அரசு செயலர் ஜவகர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், கடந்த 2015-17 ம் ஆண்டு, 2016-18, 2017-19ம் ஆண்டுகள் வரை படித்த முதுகலை பட்ட மாணவர்களுக்கும், 2015-16, 2016-17, 2017-18 ம் கல்வி ஆண்டுகளில் படித்த இளமுனைவர் மாணவர்கள் என மொத்தம் 700 பேர் பட்டம் பெற்றனர்.